• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

யுஏஇ அணுமின் நிலையம் அருகே டிரோன் தாக்குதல் – இந்தியா, சௌதி கூறியது என்ன?

Byadmin

May 18, 2026


2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம்  எழும் காட்சி

பட மூலாதாரம், adel SENNA/AFP via Getty Images

படக்குறிப்பு, 2026 மார்ச் 3 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா தொழிற்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, புகை மண்டலம் எழும் காட்சி

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை இந்தியா கண்டித்துள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; அவை பதற்றத்தை அதிகரிக்கவே செய்கின்றன. உடனடியாக சுய கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான வழிமுறைகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்று கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமைந்துள்ள பரக்கா அணுமின் நிலையம் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக, அபுதாபியின் அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்கிற விவரத்தை ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை வெளியிடவில்லை.

அல் தஃப்ரா பிராந்தியத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்தில், தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin