• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100% வரி

Byadmin

Sep 19, 2026


டிரம்ப்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மறைந்த செனட்டர் லின்ட்சே கிரஹாமின் பெயரிடப்பட்ட ‘லின்ட்சே கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் தடைவிதிப்புச் சட்டம் 2026’ சபையில் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பில் 262-159 என்ற கணக்கில் அண்மையில் நிறைவேறியது.

மசோதா

இந்த மசோதா ரஷிய வங்கிகள், ரஷிய அதிகாரிகள் மற்றும் ரஷிய எரிசக்தி வர்த்தகம் மீது பல தடைகளை விதிக்கிறது. அதேநேரம் இந்தியா உட்பட ரஷியாவுடன் எண்ணெய், எரிவாயு வாங்குகின்ற 10 நாடுகள் பிரதான நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்காக ஏகபோக அதிகாரத்தை அதிபர் டிரம்ப்புக்கு வழங்குகிறது.

ரஷிய எண்ணெய் வாங்குகின்ற பிரதான இரு நாடுகள் இந்தியாவும், சீனாவும். நிறைவேற்றப்பட்ட மசோதா ரஷியாவிடம் எண்ணெய், எரிவாயு வாங்கும் 10 நாடுகள் முதன்மை நாடுகள் இவற்றின் மீது அழுத்தத்தை அதிகரிக்க, இந்த மசோதாவில் புதிய சட்டபூர்வ வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் ரஷியாவிடம் இருந்து 15 சதவீதத்திற்கும் குறைவான அளவில் இயற்கை எரிவாயு இராக்கிமதி செய்யும் நாடுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷியாவின் வர்த்தகத்தை மட்டுப்படுத்தும் பல அம்சங்கள் மசோதாவில் உள்ளன.

By admin