• Sat. Sep 19th, 2026

24×7 Live News

Apdin News

வரத ரெட்டி: ஆந்திர விவசாயி வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடியில் சாதித்தது எப்படி?

Byadmin

Sep 19, 2026


வறண்ட பிரதேசத்தில் அவகாடோ சாகுபடி செய்து சாதித்த விவசாயி - முதல் ஓராண்டில் சந்தித்த சவால்கள் என்ன?
படக்குறிப்பு, நான்கு ஆண்டு உழைப்புக்குப் பிறகு அவகாடோ சாகுபடியில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறும் விவசாயி வரத ரெட்டி

    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

“அனைத்திந்திய வானொலி நிலையத்திலிருந்து போன் செய்து, வானொலியில் பிரதமர் தனது பெயரைச் சொல்லப் போவதாகக் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. மோதியின் வாயிலிருந்து எனது பெயரைக் கேட்டதை எனது குடும்பம் எப்போதுமே மறக்காது” என்று அவகாடோ விவசாயி வரத ரெட்டி தெரிவித்தார்.

“இப்போது அவகாடோ பழம் மிகவும் பிரபலமாகி வருகிறது. இது நமது விவசாயிகளுக்கும் பெரிதும் உதவுகிறது” என்று அவகாடோ சாகுபடிக் குறித்துப் பிரதமர் மோதி தனது உரையில் குறிப்பிட்டார். அவர் உதாரணம் காட்டிய விவசாயிகளின் பெயர்களில் வரத ரெட்டியின் பெயரும் ஒன்று.

ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த வேடார்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வரத ரெட்டி.

கடந்த ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்ற 137-வது ‘மன் கி பாத்’ (Mann Ki Baat) நிகழ்ச்சியில், நாட்டில் பிரபலமடைந்து வரும் அவகாடோ பழம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

“இப்போது அவகாடோ மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. இதன் மதிப்பும் தேவையும் குறைவாகவே இருந்தது. ஆனால் இப்போது உணவு மேசையில் இது அதிகளவில் காணப்படுகிறது” என்று மோடி கூறினார்.

By admin