• Tue. Apr 21st, 2026

24×7 Live News

Apdin News

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் புதிய முடிவால் இந்தியாவுக்கு என்ன லாபம்?

Byadmin

Apr 19, 2026


ரஷ்ய எண்ணெய், அமெரிக்கா, இரான், இந்தியா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தடைசெய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய்க்கான விலக்கு நீட்டிக்கப்படாது என்று அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது.

அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கான அனுமதி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

இரான் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான், அமெரிக்க கருவூலச் செயலாளர் ரஷ்ய எண்ணெய் மீதான விலக்கு முடிவுக்கு வருவதாக அறிவித்தார், ஆனால் இப்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது.

இது டிரம்பின் தனிப்பட்ட ‘முழுமையான மாற்றம்’ மட்டுமல்ல, ‘முழு குழுவின் மாற்றம்’ என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், ஒரு நாளைக்கு முன்னதாக, லெபனானில் போர்நிறுத்தத்தை மேற்கோள் காட்டி, ஹோர்மூஸ் நீரிணையை ‘முழுமையாகத் திறப்பதாக’ இரான் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன; அன்றைய தினத்தின் தொடக்கத்தில் ஒரு பேரல் 98 டாலருக்கும் அதிகமாக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, பின்னர் 90 டாலருக்கும் கீழே குறைந்தது. போருக்கு முன்பு இது ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலராக இருந்தது.

By admin