• Tue. Sep 22nd, 2026

24×7 Live News

Apdin News

ராகவா லோரன்ஸ் நடிப்பில் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

Byadmin

Sep 22, 2026


தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான ராகவா லோரன்ஸ், மகாபாரத காப்பியத்தின் கொடை வள்ளலாக திகழும் கர்ணனின் காவிய வாழ்க்கையைத் தழுவி தயாராகும் ‘மகாவீர் கர்ணா’ திரைப்படத்தில் கர்ணனாக நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தயாராகும் ‘மகாவீர் கர்ணா’ திரைப்படத்தில் நடிகர் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஆர். வி. ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன. இந்தத் திரைப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்திலால் காடா வழங்குகிறார்.

இந்திய மதிப்பில் 150 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக உருவாகிறது.

இந்தத் திரைப்படத்திற்காக சர்வதேச தரத்திலான வி.எஃப்.எக்ஸ் (VFX) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும்; கௌரவம், விஸ்வாசம், தியாகம் என தன் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்ட இதிகாச நாயகன் கொடைவள்ளல் கர்ணனின் வாழ்வியலை உணர்வுபூர்வமாகவும், பிரம்மாண்டமாகவும் உருவாக்குகிறார்கள்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரத்யேக போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

By admin