• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் ‘பீப் ‘ படத்தை விளம்பரப்படுத்தும் காணொளி வெளியீடு

Byadmin

Aug 16, 2026


சின்னத்திரை பிரபலமான நடிகர் ராகவ் ரங்கநாதன் கதையின் நாயகனாக-  கதையை வழி நடத்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பீப் ‘  திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழு ‘ச்சாலா ஹேப்பி நானு’ எனும் பிரத்யேக பாடலையும், பாடலுக்கான காணொளியையும் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் எல். சண்முகசுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீப் ‘ திரைப்படத்தில் ராகவ் ரங்கநாதன், யாமினி, பிரேமா, பிரியதர்ஷினி, நித்திஷ் வீரா , அருண் மோகன்,  ஷ்ரவன், ராஜேஷ் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரதீப் பத்மகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரசாந்த் விகாரி இசையமைத்திருக்கிறார்.

ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம்குவெஸ்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில், :சிறப்பு நண்பர் பாடல்’ என்ற பிரிவில் ‘ ச்சாலா ஹேப்பி நானு லேடி சூப்பர் ஸ்டாரூ நேரா பாத்த நிமிஷம் சொர்க்கமடைந்திடுவேனோ…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலை பாடலாசிரியர் எல். சண்முகசுந்தர் எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான பிரசாந்த் விஹாரி மற்றும் பின்னணி பாடகி தனீஷா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்த ‘சிறப்பு நண்பர் பாடல்’ சமர்ப்பணம் என படக்குழு தெரிவித்திருப்பதாலும்,  இந்தப் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருப்பதாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

By admin