• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

கர்நாடக துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 3 தமிழர்கள் – எல்லையில் என்ன நடந்தது? குடும்பத்தினர் கூறுவது என்ன?

Byadmin

Aug 16, 2026


கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள்
படக்குறிப்பு, அந்தோணிசாமி, ஜெபஸ்டின் டேவிட் குமார் மற்றும் ஜான் ரோஸ் பீட்டர்

மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்தனர். மரிய மகிமை தாஸ் என்பவர் காயமடைந்தார்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள கர்நாடக பகுதியான சாம்ராஜநகர் மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் வனத்துறை அலுவலர்களை தாக்கியதாகவும் வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசம் இருந்து துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி மீட்கப்பட்டதாகவும் வனத்துறை தெரிவித்தது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை அவர்களின் குடும்பத்தினர் மறுக்கின்றனர். நால்வரும் காணாமல் போன மாடுகளைத் தேடியே காட்டுக்குள் சென்றதாக ஜெபஸ்டின் டேவிட் குமாரின் மனைவி டோமினோ லியோ மேரி தெரிவிக்கிறார்.

By admin