• Sun. Aug 16th, 2026

24×7 Live News

Apdin News

கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் – பிரேமலதா!

Byadmin

Aug 16, 2026


தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

By admin