• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் சோமதேவாவின் உருவ பொம்மை எரிப்பு

Byadmin

Nov 18, 2026


செம்மணி மனித புதைகுழி தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் சோமதேவாவின் உருவ பொம்மை என்பவை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், செம்மணி புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (17) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை தபால்கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமான போராட்டம் அங்கிருந்த பேரணியாக செம்மணி மனித புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி மயானம் வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முடிவில்  தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் சோமதேவாவின் உருவ பொம்மை என்பவை தீயிட்டு கொளுத்தப்பட்டது

செம்மணி மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகள், தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களை புதைத்ததாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

By admin