• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

குஜராத்: பில்கிஸ் பானு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு பிணை – அவர் கூறியது என்ன?

Byadmin

Nov 18, 2026


குஜராத் கலவரம், கோத்ரா கலவரம், கோத்ரா ரயில் தீ விபத்து, உச்ச நீதிமன்றம், பில்கிஸ் பானு

படக்குறிப்பு, குஜராத் கலவரத்தின் போது நடந்த மிகவும் கொடூரமான குற்றங்களில் ஒன்றாக பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதல் அமைந்தது

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்த கட்டுரையில் சில வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்படுவதையும் அவர் நேரில் பார்த்தார். தனக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட இருவருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், தனது “வலி, அதிர்ச்சி மற்றும் நம்ப முடியாத நிலை” குறித்து அவர் பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து ஊடகச் செய்திகள் மூலமாகவே அறிந்ததாகத் தெரிவித்த பில்கிஸ் பானு, நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இருவரும், பில்கிஸ் பானு மீதான தாக்குதலில் ஈடுபட்டதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் கொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள்.

குஜராத் மாநில அரசின் உத்தரவின்படி, இந்த 11 பேரும் 2022-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த முடிவும், அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தபோது நடத்தப்பட்ட கொண்டாட்டங்களும் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு அந்த விடுதலை உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

By admin