• Wed. Nov 18th, 2026

24×7 Live News

Apdin News

தங்கத்தின் விலை சரிவு தொடருமா? டிசம்பர் 2-வது வாரத்தில் வரும் முக்கிய முடிவு

Byadmin

Nov 18, 2026


காணொளிக் குறிப்பு, தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வர என்னக் காரணம்?

தங்கத்தின் விலை சரிவு தொடருமா? டிசம்பர் 2-வது வாரத்தில் வரும் முக்கிய முடிவு

பிரசுரிக்கப்பட்டது

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

நவம்பர் 17ஆம் தேதி காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஒரு கிராம் தங்கம் 12,470 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,760 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழே வந்துள்ளது. பங்குச்சந்தையோடு ஒப்பிடும் போது கடந்த ஆண்டு கணிசமான லாபத்தை தங்கம் முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது.

இந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது ஏன்? தங்கத்தின் போக்கை வரும் நாட்களில் தீர்மானிக்க கூடியதாக இருக்கும் விஷயங்கள் என்னென்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கான முக்கிய காரணத்தை பிபிசி தமிழிடம் பேசிய நிதி ஆலோசகர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன் விளக்கினார்.

இந்தாண்டு தொடக்கத்தில் 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை 1.8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்த நிலையில், நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி 1.36 லட்சம் ரூபாயாக சரிந்திருக்கிறது. 2026-ல் தங்கத்தின் விலை இப்படி சரிவை சந்தித்திருக்கும் நிலையில், 2027-ல் அதன் போக்கு எப்படி இருக்கும்?

சமீப நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ள நிலையில், தங்கம் விலையில் அது மேலும் தாக்கத்தை ஏற்படுத்துமா?

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin