• Fri. Jul 3rd, 2026

24×7 Live News

Apdin News

ராமர் கோவில் காணிக்கைத் திருட்டு வழக்கு: ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி அல்லது முதலமைச்சர் யோகி, யாரை நோக்கி அதிக கேள்விகள் அதிக கேள்விகள் எழுப்பப்படுகின்றன?

Byadmin

Jul 3, 2026


ராம் மந்திர்

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.எச்.பி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.

மஹிபால் சிங் ஜனவரி 2021 முதல் மே 2022 வரை ராம் மந்திர் தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்கு பொறுப்பாளராக இருந்தார்.

ராமர் கோயிலுக்காக பெறப்பட்ட காணிக்கை பணம் எண்ணப்படும் காவல் நிலையத்தின் எண்ணும் மையத்தில் தாம் பணியில் இருந்ததாக பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு அளித்த பேட்டியில் மஹிபால் சிங் கூறினார்.

அபிஷேக் உபாத்யாயிடம் மஹிபால் சிங் கூறுகையில், “ரத்னேஷ் சதுர்வேதி மற்றும் ககன்தீப் ஆகிய இரண்டு வங்கி அதிகாரிகள் வருவார்கள். பதினான்கு சிறுவர்கள் நோட்டுகளை பிரிப்பார்கள், நான் பொறுப்பாளராக இருந்தேன். என் முன்னிலையில் தான் எண்ணும் பணி நடக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும், அந்த சிறுவர்கள் அதிக நோட்டுகளை பேக் செய்து எடுத்துச் செல்வார்கள், வவுச்சரில் குறைவாக எழுதுவார்கள். ஆரம்பத்தில் எனக்கு இது தெரியாது. ஆனால் பின்னர், அவர்கள் வவுச்சரில் நோட்டு கட்டுகளின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டி, அதிகமாக எடுத்துச் செல்வதை நான் உணர்ந்தேன்” என்றார்.

“ஒரு நாள் எனக்கு சந்தேகம் வந்து பெட்டியைத் திறக்கச் சொன்னேன். அவர்கள் கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் கொண்டு சென்றனர். இது குறித்து கோபால் ராவ் மற்றும் சம்பத் ராய் பைஜி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். இது டிசம்பர் 2021-ல் நடந்தது. ஆனால் எனது புகாரின் விளைவாக, அறங்காவலர் அனில் மிஸ்ரா எனக்குப் பதிலாக வேறொருவரை நியமித்தார். அதன் பிறகு நான் அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய மஹிபால் சிங், “சம்பத் ராயின் ஓட்டுநரான தின்னு யாதவ் தான் வவுச்சர்களில் கையெழுத்திட்டார், அதில் தான் முறைகேடு நடந்தது. சம்பத் ராய் தின்னு யாதவ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், அவரைப் பற்றி யாரும் புகார் கூறுவதை அவர் விரும்பவில்லை. சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டன.

By admin