• Sat. Nov 21st, 2026

24×7 Live News

Apdin News

ராமேஸ்வரம்: 2வது பிறந்த பெண் குழந்தை உயிரோடு புதைப்பா? தந்தை உள்பட 3 பேர் கைது – தாய் புதிய தகவல்

Byadmin

Nov 21, 2026


இரண்டாவது பிறந்த பெண் குழந்தை உயிரோடு புதைப்பா? தந்தை உள்பட 3 பேர் கைது - பிரசவம் பற்றி தாய் தகவல்
படக்குறிப்பு, நவம்பர் 17ஆம் தேதி இரவு சுமார் 11 மணியளவில் தனக்குத் திடீரென வயிற்றிலும் முதுகிலும் கடுமையான வலி ஏற்பட்டதாக லோகநந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வீட்டிலேயே குறைப்பிரசவமாகப் பிறந்த பெண் குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டது தொடர்பாக, குழந்தையின் தந்தை, தாத்தா, அத்தை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பிரசவத்துக்குப் பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லோகநந்தினியின் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருப்பதுடன், தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு குடும்பத்தினரிடம் கெஞ்சியதாகவும், ஆனால் அவர்கள் குழந்தையை வீட்டிற்குள் எடுத்துச் சென்று பின்னர் புதைத்துவிட்டதாகவும் குழந்தையின் தாய் லோகநந்தினி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தை உயிருடன் இருந்தபோது புதைக்கப்பட்டதா அல்லது ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

குழந்தையின் உடற்கூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் குறித்து உறுதியாகத் தெரிவிக்க முடியும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். என்ன நடந்தது?

By admin