• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

Byadmin

Aug 22, 2026


ரேஷன் அரிசி, ரத்த சர்க்கரை அளவு, தமிழ்நாடு, உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் – திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.

ரேஷன் கடைகளில் தற்போது தரப்படும் அரிசிக்குப் பதிலாக சன்னரக அரிசி வழங்கப்படும் என்றும், அதற்காகவே அதன் உற்பத்தியைப் பெருக்க அதற்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அரசு வழங்கும் ஊக்கத்தொகைக்காக டெல்டா விவசாயிகள் சன்னரக அரிசிக்கு மாறமாட்டார்கள் என்கிறார் விவசாயிகள் சங்க நிர்வாகி சுவாமிமலை விமலநாதன்.

ரேஷன் கடைகளில் அரிசி வாங்கிய பொதுமக்கள் சிலரிடம் பிபிசி பேசியபோது, பெரும்பாலானவர்கள் ரேஷன் அரிசியை இட்லிக்குப் பயன்படுத்துவதாகவும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதைச் சாப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.

பாலிஷ் குறைவு என்பதால் ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சற்று உதவலாம் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.

By admin