• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

ராஜீவ் காந்தி சோனியா மீது காதல் கொண்டது எப்படி? அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார்? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Aug 22, 2026


ராஜீவ் காந்தி, சோனியா காந்தி

பட மூலாதாரம், Daniel SIMON/Gamma-Rapho via Getty Images

படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சோனியா காந்தியை முதன்முதலில் 1965-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் சந்தித்தார்.

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

அது 1981-ஆம் ஆண்டு மே மாதம்.

ராஜீவ் காந்தி அமேதி தொகுதி மக்களவைத் இடைத்தேர்தலில் போட்டியிடவிருந்தார். அவர் அந்த தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

சில மணி நேரத்தில் லக்னோவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் அவர் பயணம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது, 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திலோய் பகுதியில் 30-40 குடிசைகள் தீப்பிடித்து எரிந்துவிட்டதாக தகவல் வந்தது.

லக்னோ செல்வதற்குப் பதிலாக, அவர் தனது காரை திலோய் நோக்கித் திருப்பினார்.

அங்கு தீயில் எரிந்து போன குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

By admin