மறுப்பு:
இது குறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துடனான உரையாடலில் பேசிய அவர், “ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து ஊடகங்களில் பல ஊகங்கள் பரவி வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் ரோகித் தனது கடைசி போட்டியில் விளையாடுவார் என்பது போன்ற எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன்.
ரோகித் இந்திய ஒருநாள் அணியின் வழக்கமான உறுப்பினர்; அணியின் திட்டமிடலில் அவர் இடம்பெறும் வரை தொடர்ந்து நாட்டிற்காக விளையாடுவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லார்ட்ஸ் ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்காது,” என்று தெரிவித்தார்.