• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

லக்னௌ பயிற்சி மையத்தில் தீ விபத்து: 15 மாணவர்கள் பலி; 5 பேர் காயம்

Byadmin

Jun 22, 2026


லக்னௌவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
படக்குறிப்பு, லக்னௌவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னௌவில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் இயங்கி வந்த தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தகவலை கே.ஜி.எம்.யு மருத்துவமனை அவசர சிகிச்சை மையத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் அமிய அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பிடிஐ செய்தி முகமையிடம் அவர் கூறுகையில், “21 முதல் 22 மாணவர்கள் வரை கொண்டு வரப்பட்டனர். 5 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் கட்டடத்திலிருந்து குதித்ததால் காயமடைந்துள்ளனர்; அவர்களின் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சி.டி ஸ்கேன் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 15 மாணவர்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டனர். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறைக்கு அனுப்பப்படும். ” என்று தெரிவித்தார்.

உத்தரபிரதேச துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

By admin