0
பிரபல நடிகரான ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படத்தில் ஜீவா- இவானா- ‘பரிதாபங்கள்’ சுதாகர் – ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.முழு நீள நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சமுள்ள இந்தத் திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கொர்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் தயாரித்திருக்கிறார்.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள்… இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இதனிடையே ‘சிவா மனசுல சக்தி’ என்ற வெற்றி பெற்ற படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குநர் ராஜேஷ்- நடிகர் ஜீவா கூட்டணி அமைத்திருப்பதால்.. ‘ஜாலியா இருந்த ஒருத்தன் ‘படத்திற்கு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலக வணிகர்களிடமும் நேர் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.