என்ன இந்த மகா நிக்கோபார் சர்ச்சை?
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி மற்றும் சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த திட்டத்தால் அங்குள்ள காடுகள், கடல்சார் சூழல் மற்றும் பூர்வகுடி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த ஆளும் தரப்பு – ஏதிர்காட்சி மோதலுக்கு மத்தியில்தான், ராகுல் காந்தியின் ஸ்கூபா டைவிங் செலவு குறித்த இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது.