பட மூலாதாரம், Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.)
பிரிட்டன் பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கியர் ஸ்டாமர் அறிவித்துள்ளார்.
10 டவுனிங் தெருவில் தனது முடிவை விளக்கிய அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்தத் தான் மிகவும் பொருத்தமானவரா என்பது குறித்துத் தனது கட்சி கேள்வி எழுப்பி வருவதாகக் கூறினார்.
இந்தக் கேள்விக்குத் தனது கட்சி அளித்துள்ள பதிலை தான் “கேட்டிருப்பதாகவும்”, “அந்தப் பதிலை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாகவும்” அவர் கூறியுள்ளார்.
தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், “தான் நேசிக்கும் தனது நாட்டை முதன்மைப்படுத்துவது குறித்தே அமைந்திருந்ததாக” அவர் கூறியுள்ளார்.