• Mon. Aug 24th, 2026

24×7 Live News

Apdin News

லியா ஸ்டீவர்ட்: ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி உயிர் பிழைத்த இளம்பெண் கூறுவது என்ன?

Byadmin

Aug 24, 2026


 லியா ஸ்டீவர்ட்

பட மூலாதாரம், Supplied

படக்குறிப்பு, சிட்னியின் கூஜி கடற்கரையில் காலை நீச்சலின் போது லியா ஸ்டீவர்ட்டை ஒரு சுறா கடித்தது.

    • எழுதியவர், லானா லாம்
    • பதவி, சிட்னி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளான பெண், தனக்கு “வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக”வும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.

35 வயதான லியா ஸ்டீவர்ட், கடந்த ஜூன் மாதம் கூஜி கடற்கரையில் காலை நேரத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கானார். அவரது கைகள் மற்றும் கால்களில் சுறா பலமுறை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக சுறா தாக்குதல்கள் நடந்த காலகட்டத்தில் இந்த சம்பவமும் நிகழ்ந்தது.

ஒரு குழந்தைக்குத் தாயான லியா ஸ்டீவர்ட், மருத்துவர்களால் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.

திங்கட்கிழமை இணையத்தில் வெளியிட்ட பதிவில், தனக்காக 5.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலருக்கும் (3.94 லட்சம் அமெரிக்க டாலர்) அதிகமாக நிதி திரட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தனது உடல்நலம் தேறுவதற்கான பயணம் “மிகவும் கடினமாக இருந்ததாகவும்”, ஆனால் தற்போது “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

By admin