• Sun. Oct 18th, 2026

24×7 Live News

Apdin News

வங்கதேசம்: ரிசார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி

Byadmin

Oct 18, 2026


வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர்.

எரிந்து நாசம்

இனானியில், மரைன் டிரைவில் உள்ள படுவார்டெக் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள மூன்று மாடிகளைக் கொண்ட அந்த ரிசார்ட்டில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மூங்கில் மற்றும் மரத்தால் கட்டப்பட்டிருந்த அந்த ரிசார்ட் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

தீ விபத்து ஏற்பட்டபோது அந்த ரிசார்ட்டில் சுமார் 30 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில், நான்கு அல்லது ஐந்து பேர் தப்பித்துவிட்டனர். ஆனால் 10 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 10 பேரில் குழந்தைகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin