• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Byadmin

May 18, 2026


வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் 17வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (18) நடைபெற்றது.

வவுனியா ஏ9 அஞ்சல் திணைக்களத்தின் முன்பாக 3375வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் பந்தலுக்கு முன்பாகவே குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தீபமேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.

The post வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் appeared first on Vanakkam London.

By admin