• Mon. May 18th, 2026

24×7 Live News

Apdin News

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?

Byadmin

May 18, 2026


மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் சாலைகள் எங்கும் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம், யுபிஐ பரிமாற்றம், வீடியோ ஸ்ட்ரீமிங், சமூக ஊடகங்கள், கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை ஆதரிக்கத் தேவையான தரவு மையங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

இந்த இரண்டும் தனித்தனியாகப் பார்க்கையில் இருவேறு உலகங்களாகத் தெரிந்தாலும், இவை ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தை அடிப்படையில் சார்ந்துள்ளன. அதுதான், வலுவான, நம்பகமான மின்னணுவியல்.

சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.

அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவாக, மின்சார வாகனங்களின் பாதுகாப்பு, ஆற்றல் திறன் ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும், அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் இது குறித்து இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய, இந்திய அறிவியல் நிறுவனத்தின் மின்னணு அமைப்புகள் பொறியியல் துறையைச் சேர்ந்த மயங்க் ஸ்ரீவஸ்தவா பிபிசி தமிழிடம் பேசியபோது, “இப்போது பயன்பாட்டில் இருக்கும் சிலிக்கானை விட கேலியம் நைட்ரைட் அதிவேகம் மற்றும் அதிக திறனைக் கொண்டது. ஆனால், சில தடைகளின் காரணமாக அது நம்பகமானதாக இதுவரை இருக்கவில்லை. அதை இந்த ஆராய்ச்சியில் நாங்கள் வடிவமைத்துள்ள புதிய கட்டமைப்பு மாற்றுகிறது,” என்று கூறினார்.

By admin