• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

வாகனங்களில் நம்பர் பிளேட் பயன்படுத்தும் வழக்கம் முதலில் எப்போது, ​​எதற்காக தொடங்கியது?

Byadmin

Jun 20, 2026


போக்குவரத்து அபராதங்களில் இருந்து தப்பிக்கவும், பிற குற்றங்களுக்காகவும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி போலீசாரிடம் சிக்கும் சம்பவங்கள் ஹைதராபாத் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    • எழுதியவர், சாரதா மியாபுரம்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஸ்டீயரிங்கில் உள்ள ஒரு பட்டனை அழுத்தியவுடன், காரின் நம்பர் பிளேட் கண்முன்னே மாறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து அபராதங்களில் இருந்து தப்பிக்கவும், பிற குற்றங்களுக்காகவும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை மாற்றி போலீசாரிடம் சிக்கும் சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

ஜூன் 4ஆம் தேதி, ஹைதராபாத் நகரம் முழுவதும் போலீசார் சிறப்பு சோதனைகளை நடத்தினர். அப்போது, போலி நம்பர் பிளேட்டுகளை கொண்ட 2,100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

‘ஆபரேஷன் கவாச்’ என்ற பெயரில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு வரை போலீசார் நடத்திய சோதனையின்போது, நம்பர் பிளேட் குளோனிங், முறைகேடு செய்தல், போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துதல், இரண்டு வாகனங்களுக்கு ஒரே எண்ணைப் பயன்படுத்துதல் போன்றவை கண்டறியப்பட்டதாக போலீசார் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

வாகனப் பதிவு எண்களில் முறைகேடு செய்வது போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படும் என்று ஆணையர் கூறினார். அதோடு, பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட்டுகள் தொடர்பான சட்டத்தை மீறும் எந்தவொரு நடவடிக்கையும் குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

By admin