• Mon. Jul 6th, 2026

24×7 Live News

Apdin News

‘வாட்ஸ்அப்பில் ஆர்டர், விரைவுத் தபாலில் டெலிவரி’ – 21 மாநிலங்களுக்கு கஞ்சா அனுப்பிய கும்பல் சிக்கியது எப்படி?

Byadmin

Jul 6, 2026


ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு ஸ்பீட் போஸ்டில் கஞ்சா விநியோகித்த கும்பல் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Hyderabadpolice

விரைவுத் தபால் மூலம் ஆவணங்கள், பொருட்கள், பரிசுப் பொருட்கள் அனுப்பப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்திய தபால் துறையின் விரைவுத் தபால் சேவையை பயன்படுத்தி கஞ்சா கடத்திய கும்பலை ஹைதராபாத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

ஹைதராபாத் நகர காவல்துறையும், ஹைதராபாத் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

“இந்தக் கும்பல் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் செயல்பட்டு வந்தது என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஐந்து பேர் கொண்ட கும்பலின் முக்கிய உறுப்பினரான ஜார்கண்டைச் சேர்ந்த சத்யம் மிஸ்ராவை கைது செய்துள்ளோம். மற்ற நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர்,” என்று ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார்.

சத்யம் மிஸ்ராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்ததாக அவர் பிபிசியிடம் கூறினார்.

“ஆரம்பத்தில் அவர் பெயின்டராகவும் லாரி ஓட்டுநராகவும் வேலை செய்துள்ளார். 2018ஆம் ஆண்டு பல்வேறு மாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்துச் செல்லும் பணிக்காக மும்பைக்கு சென்றபோது கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார்,” என்று சஜ்ஜனார் கூறினார்.

By admin