• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

வாரணாசியில் உள்ள மசூதி குறித்து பாகிஸ்தான் அதிபர் தெரிவித்த கருத்து – இந்திய தரப்பு கடுமையான எதிர்வினை

Byadmin

Jun 22, 2026


மசூதியை காலி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது

பட மூலாதாரம், RK

படக்குறிப்பு, மசூதியை காலி செய்ய வலியுறுத்தி ரயில்வே நிர்வாகம் சுவரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வாரணாசியின் கஞ்ச் ஷஹீதா மசூதி குறித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை ஊடகங்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,

“பாகிஸ்தான் அதிபரின் ஆதாரமற்ற கருத்துக்களை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. எப்படியிருந்தாலும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார்.

இதற்கு முன்னதாக சனிக்கிழமை, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வாரணாசியில் உள்ள கஞ்ச் ஷஹீதா மசூதியைக் குறிப்பிட்டு இந்தியாவில் உள்ள முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

பாகிஸ்தான் அதிபர் அலுவலக அறிக்கை ஒன்றில், “இந்தியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதற்கும், அவற்றிற்கு எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இதில் வாரணாசியின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கஞ்ச் ஷஹீதா மசூதியும் அடங்கும்.” என கூறப்பட்டுள்ளது.

By admin