• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ கடந்து வந்த பாதை – முழு விவரம்

Byadmin

Jul 17, 2026


விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று படத்தை தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் என்று மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமும் அதிகாரப்பூர்வமாக தனது இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.

படத்தை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் விண்ணப்பித்த பின் 7 மாதங்கள் கழித்து இந்த சான்றிதழ் கிடைத்து இருக்கிறது. ரிலீஸ் தேதி அறிவித்த ஆறரை மாதங்களுக்கு பின் இந்த படம் வெளியாக உள்ளது. ஏன் இந்த கால தாமதம்? சான்றிதழ் பெறுவதில் என்ன பிரச்னை?

ஜனநாயகன் படம் கடந்த வந்த பாதையை பார்க்கலாம்.

ஜனநாயகன் தொடங்கியது எப்படி?

விஜயின் கடைசி படம், ஜனநாயகன் பட வெளியீடு

பட மூலாதாரம், X/@JanaNayaganFilm

வெங்கட்பிரபு இயக்கிய ‘கோட்’ படத்துக்குபின் விஜய் நடிப்பில் 69வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி, 2024-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே எழுந்தது. இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன், எச்.வினோத், அட்லி ஆகியோர் அந்த பட்டியலில் இருந்தனர். தெலுங்கு இயக்குநர்களான திரிவிக்ரம், அனில்ரவிபுடி ஆகியோர் விஜயிடம் கதை சொன்னதாக தகவல்கள் கசிந்தன. கடைசியில் எச்.வினோத் ஒப்பந்தம் ஆனார்.

பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, விஜய் நடிக்கும் 69வது படம் தொடங்குவதாக 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முறைப்படி அறிவிப்பு வெளியானது. அக்டோபர் 4-ஆம் தேதி சென்னையில் படப்பூஜை போடப்பட்டு மறுநாள் படப்பிடிப்பு தொடங்கியது.

By admin