• Tue. Sep 29th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் அரசு நான்கு மாதங்களில் திரும்ப பெற்ற 7 முக்கிய முடிவுகள் எவை? – என்ன நடந்தது?

Byadmin

Sep 29, 2026


முதலமைச்சர் விஜய், தவெக அரசு, தமிழக வெற்றிக் கழகம்

படக்குறிப்பு, தவெக அரசில் சில அரசாணைகள், நியமனங்கள் மற்றும் டெண்டர்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன

    • எழுதியவர், யாழினியன்
    • பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொது (சட்டம்-ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இந்த அரசாணை வெளியான சில மணி நேரத்திலேயே எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதுபோன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்து, பின்னர் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது இது முதல்முறையல்ல. அரசு பொறுப்பேற்ற முதல் சில மாதங்களிலேயே, சர்ச்சைக்குள்ளான பல்வேறு நியமனங்கள், அரசாணைகள் மற்றும் டெண்டர்கள் அடுத்தடுத்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஆர்டிஐ விலக்கு ஏன் சர்ச்சையானது?

பொது சட்டம்-ஒழுங்குத் துறையின் கீழ் காவல் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை அறிக்கைகள், காவல் நிலைய மரணங்கள், காவல் துறை சித்ரவதை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விவகாரங்கள் வருகின்றன.

எனவே, இந்தத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டால் பொதுமக்கள் இதுபோன்ற தகவல்களை ஆர்டிஐ மூலம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

By admin