• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

விஜய் vs திமுக: 50 ஆண்டு கழித்தும் பேசப்படும் சர்க்காரிய கமிஷன் அறிக்கையில் என்ன உள்ளது? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Sep 8, 2026


முதலமைச்சர் விஜய்

பட மூலாதாரம், TNDIPR

படக்குறிப்பு, முதலமைச்சர் விஜய் திமுக மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை (செப்டம்பர் 7) சட்டப்பேரவையில் பேசியதன் மூலம் 1970களில் இருந்து இன்று வரை தமிழ்நாட்டு அரசியலில் இடம்பெறும் விவாதப்பொருள் ஒன்று மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுதான் சர்க்காரியா ஆணையம். திமுக ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். எஸ்.சர்க்காரியா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தை இது குறிக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் திங்கள்கிழமை உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

அப்போது, சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகள் எனக் கூறி பேசிய முதலமைச்சர் விஜய், “1970களில் ‘ஒரு நிறுவனத்துக்கு’ வீராணத்துக்கு குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு டெண்டர் கொடுத்தது குறித்து” குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எம்ஜிஆர், அதற்குப் பிறகு ஜெயலலிதா என அதிமுக ஆட்சிக் காலங்களில் திமுக மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுள் சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கை அவ்வப்போது இடம்பெறும். தற்போது விஜயின் ஆட்சிக் காலத்திலும் இது முக்கியமாக பேசப்படுகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளான நிலையிலும் இன்றும் பேசப்படும் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? அதில் தெரியவந்தது என்ன?

By admin