விடாது முயலும்
முயற்சி தந்துவிடும்
விழாது வாழும் ஒரு
பெரு வாழ்வை வாழ.
தடை உடைத்து
தாகம் தீர்த்து
விடை காணும்
ஒரு நேரம் வரும்.
கூடி இருந்தவர்
கூடாதவர் என்று
துயரம் வரும் போது
தெரிந்து விடும்.
துணை இருக்கும்
துணிவுள்ளவர் யார்?
அறிந்து விட வந்த
வாய்ப்பு இதுவென்று.
எழுத்தில் உறையும்
உண்மைகள் ஆயிரம்.
கதைகள் வடிவில்
நூல்கள் தோன்றும்.
பொத்தகம் தடுத்து?…
பொத்துவில் தொடக்கம்
பொலிகண்டி வரைக்கும்
ஒரு கதை உண்டு இங்கே.
அவற்றை பேசிட
தடுப்பதும் கூடவே
துடுப்பை ஒடித்து
விடுப்புப் பேச வைக்கிறார்.
முடிவொன்று கிட்டும்
விடுதலை என்று.
விடாது முயலும் நட்பே
உன்னோடு நானும்.
நதுநசி
The post விடாது முயலும் நட்பே உன்னோடு நானும் | நதுநசி appeared first on Vanakkam London.