• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

IPL 2026 | ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, ஃபெரரியா அபாரம்… பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ்

Byadmin

Apr 29, 2026


ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 40-ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

பேட்டிங்கில் பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் ப்ரியான்ஷ் ஆர்யா தங்களது அணிக்கு நல்ல துவக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். பிரப்சிம்ரன் சிங் 59 ரன்களிலும், ப்ரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 29 ரன்களை அடித்து அவுட் ஆனார்.

தொடர்ந்து ஆடிய கூப்பர் கனொலி மற்றும் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தலா 30 ரன்களும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 22 பந்துகளில் 62 ரன்களை விளாசினர். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் பர்கெர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

223 ரன்களை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 27 பந்துகளில் 51 ரன்களும், 16 பந்துகளில் 43 ரன்களையும் விளாசினர்.

ரியான் பராக் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 29 ரன்களையும், ஃபெரரியா 25 பந்துகளில் 52 ரன்களையும் ஷூபம் தூபே 12 பந்துகளில் 31 ரன்களை விளாசினர்.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.

By admin