• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

PBKS vs RR: பஞ்சாப் அணி 222 ரன்களை குவித்தபோதிலும் முதல் தோல்வியை சந்தித்தது ஏன்?

Byadmin

Apr 29, 2026


இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 27 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் யஷஷ்வி ஜெய்ஸ்வால்

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 40வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சீசனின் முதல் 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத பஞ்சாப் கிங்ஸ் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷிம்ரன் ஹிட்மெயர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோருக்குப் பதிலாக தசுன் ஷனகா மற்றும் யஷ் ராஜ் புஞ்சா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. சஷாங்க் சிங் மற்றும் ஜேவியர் பார்ட்லெட் ஆகியோருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே மற்றும் லாகி ஃபெர்குசன் அணியில் இடம்பெற்றனர்.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அரைசதம் அடித்தனர்.

இந்த இலக்கை 19.2 ஓவர்களில் சேஸ் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணிக்காக யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டானவன் ஃபெரீரா ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

By admin