• Wed. Apr 29th, 2026

24×7 Live News

Apdin News

Women's T20 World Cup | மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Byadmin

Apr 29, 2026


2026 ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. விரைவில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை ஆல்-ரவுண்டர் நேட் ஸ்கைவர் பிரன்ட் வழிநடத்துகிறார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்கும் இதே அணி முன்னதாக இந்திய அணிக்கு எதிரான தொடரில் களம் காண்கிறது.

இதன் மூலம் சர்வதேச டி20 தொடரில் ஏழாவது முறையாக ஸ்கைவர் களம் காம்கிறார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒன்-ஆஃப் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்கிறது.

டி20 போட்டிகள் மே மாத இறுதியிலும், ஜூன் மாத தொடக்கத்திலும் நடக்கும் நிலையில், டெஸ்ட் போட்டி ஜூலை 10 முதல் 13-ஆம் தேதி வரை நடக்கிறது.

உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் 18-வயதான சுழற்பந்து வீச்சாளர் டில்லி கார்டீன் கோல்மென் இடம்பெற்றிருக்கிறார். இவருடன் இஸ்ஸி வாங், லாரென் ஃபைலர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மகளிர் அணி:

நேட் ஸ்கைவர் பிரன்ட் (கேப்டன்), லாரென் பெல், லைஸ் கேப்ஸி, டில்லி கார்டீன் கோல்மேன், சார்லி டீன், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், லாரென் ஃபைலர், டேனி கிப்சன், ஏமி ஜோன்ஸ், ஃப்ரெயா கெம்ப், ஹீத்தர் நைட், லின்சி ஸ்மித், இஸ்ஸி வாங், டேனி வியாட் ஹோட்ஜ்.

By admin