• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல் – Vanakkam London

Byadmin

Apr 14, 2026


ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலை திரைப்படமாக விரைவில் எடுக்கப் போவதாக  இயக்குனர் சீனு இராமசாமி அறிவித்துள்ளார்.

தீபச்செல்வனின் நூல்கள் சுங்கப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடக்குமுறைகளுக்கு மத்தியில் பிறக்கும் இலக்கியம் எப்போதுமே நெருப்பை விடச் சூடானது என்பதை உலக இலக்கிய வரலாறு உணர்த்துகிறது. நான் அறிந்த ரஷ்யக் கவிஞர் அன்னா அக்மடோவா, அதிகாரத்தின் இரும்புக்கரங்களுக்கு அஞ்சித் தனது கவிதைகளைக் காகிதத்தில் எழுத முடியாமல், மனப்பாடம் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்த தியாகம் இங்கு நினைவுகூரத்தக்கது.

இது பகையை வளர்க்கும் நேரம் அல்ல

ஆகையினால் இணைந்து ஒற்றுமையாக வாழும் ஒரு சமூகத்தில் வாழும் மக்களுக்கான நெருக்கடிகளை ஒரு படைப்பு தராமல் அவர்களின் உரிமையை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டும் மேலும் இது பகையை வளர்க்கும் நேரம் அல்ல என்பதையும் கருத்தில் நிலைத்திருந்தேன். அதைத்தான் தீபச்செல்வனும் புரிந்து வைத்திருந்தார்.

விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல் | Theepachelva S Novel To Be Made Into A Film Soon

ஆனால் தீபச்செல்வனின் எழுத்துகள் சந்திக்கின்ற நெருக்கடிகளை, தமிழ் மக்களின் நினைவுகளை அழி ரப்பர் கொண்டு அழிக்க முயலும் முயற்சியாக கருத வேண்டியுள்ளது வருந்தத்தக்கது, உலக தமிழ் மக்களோடு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகளும் ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரம் என்ற வகையில் எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு கரம் கொடுக்க முன்வர வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தயாரிப்பாளரை தேடிக்கொண்டிருக்கிறேன்

ஒரு தமிழ் எழுத்தாளனின் சுதந்திரத்தை காக்க வேண்டியது இலங்கை ஜனநாயக குடியரசின் கடமையாகும் அந்த வகையில் தங்கள் கடமையை செய்வனே செய்ய வேண்டுமென்று தாய் தமிழகத்திலிருந்து இந்த கடிதத்தின் வழியாக கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் திரைப்படமாகவுள்ள தீபச்செல்வனின் நாவல் | Theepachelva S Novel To Be Made Into A Film Soon

தீபச்செல்வனின் முந்தைய காலத்தில் யாழ்ப்பாண நூலக எரிப்பை அடிப்படையாகக் கொண்டு அவர் உருவாக்கியிருந்த பயங்கரவாதி என்ற நாவலை, நான் திரைக்கதை அமைத்ததும் அதற்கான தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதும் இங்கு யாவரும் அறிந்தது, அது ஒரு நூலகத்தின் பங்கையும் ஒரு நூலகம் என்பது பண்பாட்டின் ஒரு அம்சமாகவும் வரலாற்றை சிதையாமல் சேமிக்கும் ஒரு தன்மையாகவும் அந்த திரைப்படத்தை உருவாக்கிடல் வேண்டும் எனவும் நான் நினைத்திருந்தேன்.

திரைக்கதையில் சில திருத்தங்களை நீங்கள் செய்து கொள்ளலாம் அடிப்படை கருத்து சிதைந்து விடக்கூடாது என்பதை தீபச்செல்வன் எனக்கு குறிப்பிட்டு இருந்தார்…” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin