6
இலங்கை விமானப்படையின் உளவுத்துறை அதிகாரிகள் வழங்கிய உளவுத் தகவலின் அடிப்படையில் வனவிலங்கு திணைக்கள சுற்றிவளைப்பு அதிகாரிகளினால் மேற்கொண்ட திடீர் வனவிலங்கு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது அதிக பாதுகாப்புள்ள விலங்குகளின் பாகங்களுடன் சந்தேக நபர்கள் இருவரை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
விமானப்படை உளவுத் தகவலின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் கூட்டாக இணைந்து 10 ஆம் திகதி நேற்று முன்தினம் குருவிட்ட பொலிஸ் பிரிவின் பெரடைஸ் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
இதன்போது குரு விட்ட பகுதியை வசிப்பிடமாக கொண்ட 31,40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதுடன் மூன்று மரை (அங்கோனா)கொம்புகள், நான்கு மான்கொம்புகள், ஒரு தந்தப் பதக்கம், ஒரு தந்த மோதிரம், இரண்டு அங்குல நீளமுள்ள இரண்டு தந்தக் குச்சிகள், ஒரு தந்தப் படிகப் பேழை, ஏழு யானைப் பல் துண்டுகள், ஒரு மான்கொம்புக் கைப்பிடி ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் வழக்குப் பொருட்களையும் வனஜீவராசிகள் திணைக்கள பலாபத்தல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது டன் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னேடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையாக பாதுகாக்கப்பட்டு அழிவின் விளிம்பிலுள்ள இந்த விலங்குகளின் பாகங்களை வைத்திருத்தல்,கொண்டுசெல்லுதல்,காட்சிப்படுத்துதல், மற்றும் வர்த்தகம் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரிகள் அத்தகைய நபர்களை கைது செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அத்தகைய நபர்களைப் பற்றி பொதுமக்களாகிய உங்களிடம் ஏதேனும் தகவல்கள் இருந்தால் 1992 என்ற அவசர உதவி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு வனவிலங்கு திணைக்கள பாதுகாப்பு துறை கேட்டுக் கொள்கின்றது.
விமானப்படை உளவுத் தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் மாவட்ட கெக்கிராவ கனேவல்பொள ரிட்டிகல வனவிலங்கு அலுவலக சுற்றிவளைப்பு அதிகாரிகளின் தலைமையில் குருவிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படைஅலுவலக அதிகாரிகள் , குருநாகல் உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் ,புலத்கொஹுபிட்டிய மற்றும் பலாபத்தல அதிகாரிகள் கூட்டாக இணைந்து இச்சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர் என்பது மேலும் தெரிய வந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.