• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோதி பத்திரிகையாளர்களின் கேள்விகளை தவிர்ப்பது ஏன்?

Byadmin

May 22, 2026


இத்தாலிப் பயணத்தின்போது, ​​அந்நாட்டு பிரதமருடன் மோதி.

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இத்தாலிப் பயணத்தின்போது, ​​அந்நாட்டு பிரதமருடன் மோதி.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரதமர் நரேந்திர மோதி தனது ஐரோப்பியப் பயணத்தின்போது பத்திரிகையாளர்களிடமிருந்து கேள்விகளை எதிர்கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் உடன் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு நார்வே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோதியை வலியுறுத்தினார். இருப்பினும், பிரதமர் மோதி எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

வெளிநாட்டுத் தலைவர்களிடம் கேள்விகள் கேட்பது ஐரோப்பிய நாடுகளில் ஒரு தொன்மையான மரபின் பகுதியாகும்.

நார்வேயை சேர்ந்த பத்திரிகையாளர் ஹெலா லாங், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் மனித உரிமைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா ஒரு நாகரிக நாடு என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, ஓஸ்லோவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோதி மற்றும் பிரதமர் ஸ்டோர் ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்த பிறகு, பத்திரிகையாளர் ஹெலா லாங் எழுந்து நின்று, “பிரதமர் மோதி, உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகையாளர்களிடமிருந்து நீங்கள் ஏன் கேள்விகளை எதிர்கொள்வதில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

By admin