• Fri. May 22nd, 2026

24×7 Live News

Apdin News

இந்திய அரசியலில் புதிய ‘சூப்பர் ஸ்டார்’ ஆன கரப்பான் பூச்சி – காரணம் என்ன?

Byadmin

May 22, 2026


கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

பட மூலாதாரம், Screengrab from Cockroach Janta Party’s website

படக்குறிப்பு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அரசியலை ஒரு கேலியான அணுகுமுறையுடன் கையாண்டுள்ளது.

    • எழுதியவர், ஜோயா மதின்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்திய அரசியல் ஓர் அசாதாரணமான சின்னத்தைப் பெற்றுள்ளது. கரப்பான் பூச்சிதான் அச்சின்னம்.

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தாமரையோ அல்லது எதிர்க்கட்சியான காங்கிரஸின் கை சின்னமோ அல்ல. மாறாக கரப்பான் பூச்சி தான் அச்சின்னம்.

இந்த பூச்சி, இணையத்தில் உள்ள இந்திய இளைஞர்களுக்கு எதிர்பாராத அதேசமயம் தங்களைப் பிரதிபலிக்கும் ஓர் அரசியல் குறியீடாக மாறியுள்ளது.

கடந்த வாரம் இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த சர்ச்சைக்கரிய கருத்துகளுக்குப் பிறகு, கரப்பான் பூச்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஒரு விசாரணையின் போது, வேலை இல்லாத இளைஞர்கள் பத்திரிகை மற்றும் சமூகச் செயல்பாடுகளை நோக்கி நகர்வதை, அவர் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

By admin