• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

வெள்ளரிக்காய் + ரவை இட்லி ரெசிபி!

Byadmin

Apr 22, 2026


கோடைக்காலத்தில் உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை பராமரிக்க உதவும் முக்கியமான காய்கறி தான் வெள்ளரிக்காய். இதை அப்படியே சாப்பிடுவதற்குப் பதிலாக, சுவையான ரெசிபிகளாக செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.

பொதுவாக வெள்ளரிக்காயை சாலட் ஆக சாப்பிடுவோம். ஆனால், அதைப் பயன்படுத்தி மென்மையான மற்றும் ஆரோக்கியமான இட்லி செய்யலாம் என்பது தெரியுமா? இந்த வெள்ளரிக்காய் இட்லி காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசி இரட்டிப்பாகும்.

மேலும், தேங்காய் இல்லாமலேயே சுவையான சட்னி செய்யலாம். அதையும் இந்த இட்லியுடன் சேர்த்து சுவைத்துப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 2
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
ரவா – 1 கப் அல்லது 1/4 கிலோ
தண்ணீர் – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெள்ளரிக்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய வெள்ளரிக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த தேங்காயை வெள்ளரிக்காயுடன் சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, சிறிது கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
அதன் பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து, அத்துடன் 1 கப் ரவையை சேர்த்து, நன்கு ஒருசேர கலந்துவிட்டு, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறிவிடும் போது, மிகவும் வறண்டு போயிருந்தால், அதில் சிறிது நீரை தெளித்துவிட்டு கிளறி விட வேண்டும்.
பின்பு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் அல்லது நெய்யை தடவி, கலந்து வைத்துள்ள மாவை எடுத்து குழிகளில் வைத்து, இட்லி வேண்டும்.
பின் இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து மூடி 8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், பஞ்சு போன்று மென்மையான வெள்ளரிக்காய் இட்லி தயார்.

By admin