• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷியை தேர்வு குழுவினரால் புறக்கணிக்க முடியாமல் போனது ஏன்?

Byadmin

Jun 8, 2026


வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஐந்து பெரிய விருதுகளை வென்றார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஐந்து பெரிய விருதுகளை வென்றார்

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“வைபவ்வை பற்றி என்ன சொல்வது. அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பிளேஆஃப் சுற்றில் அவர் ஒற்றை ஆளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு சென்றார். அவர் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார் மற்றும் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்பதைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை.”

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முதன்மை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் தேர்வு செய்யும் போது இந்த காரணத்தை விவரித்தார்.

இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கின் 19-வது சீசனில் வைபவ் சூர்யவன்ஷி கலக்கிய விதம், அவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுவதைக் காண முடியும் என்பதை முன்பே தெளிவுபடுத்தியிருந்தது.

மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் அயாஸ் மேமன், வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியில் தேர்வு செய்த முடிவை நியாயப்படுத்தியுள்ளார், மேலும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய விளையாட்டு பத்திரிகையாளர் பிரத்யுஷ் ராஜ் கூறுகையில், தனது 10 ஆண்டுகால விளையாட்டு பத்திரிகை வாழ்க்கையில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒரு அரிய திறமையை தான் பார்த்ததில்லை என்றார்.

By admin