• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

வைபவ் சூர்யவன்ஷி-யின் அதிரடி பேட்டிங் பற்றி முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Nov 25, 2026


வைபவ் சூர்யவன்ஷி

படக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷி ஜூலை மாதம் இந்திய அணிக்காகத் தனது முதல் டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இருப்பினும், இதுவரை ஒரு நாள் சர்வதேச போட்டியில் (ODI) விளையாடவில்லை.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடிய இன்னிங்ஸ் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி, நேபாளத்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால், பாகிஸ்தானின் இந்த வெற்றியைவிட, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிதான் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக இரட்டைச் சதம் அடித்து 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த அவர், இதில் 28 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகளை விளாசினார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறுகையில், “லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 28 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதத்திற்கான புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்பு ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 29 பந்துகளில் சதம் அடித்து படைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்” என்றார்.

“அவர் சிறப்பாக விளையாடினார். இது ஏ அணி. டி20 போட்டிகளில் அவரது திறமை அபாரமானது. அதேபோல், அவரது அதிரடி பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. அவர் மிக நன்றாக விளையாடினார்” என்று கங்குலி தெரிவித்தார்.

By admin