• Tue. Apr 14th, 2026

24×7 Live News

Apdin News

ஹங்கேரியில் விக்டர் ஓர்பனின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவு – ரஷ்யாவுக்கு பாதகமாக ஏன் கருதப்படுகிறது?

Byadmin

Apr 14, 2026


ஹங்கேரி, தேர்தல்,  ஓபான், மாஜார்

பட மூலாதாரம், Lea Guedj/BBC

புடாபெஸ்டின் புகழ்பெற்ற சங்கிலிப் பாலம், அழகிய புடாவையும் துடிப்பான பெஸ்ட்டையும் டானூப் நதியின் குறுக்கே இணைக்கிறது. இரவில், பாலத்தை ஒளிரச் செய்யும் விளக்குகள் கீழே உள்ள நீரில் சிறு நிலவுகளைப் போல மின்னுகின்றன.

வழக்கமாக, இது சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுப்பதற்குப் பிடித்தமான இடமாகும் – ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை அப்படியில்லை.

16 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் விக்டர் ஓர்பனை வெளியேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவைத் தொடர்ந்து, ஹங்கேரிய கொடியின் வண்ணங்களான பச்சை, வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் பாலம் ஒளிரூட்டப்பட்டது.

வெற்றி பெற்ற பீட்டர் மாஜார் மற்றும் அவரது டிஸ்ஸா கட்சியின் ஆதரவாளர்கள், தாங்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதாக உணர்ந்ததாகக் கூறினர். மாஜார் தனது வெற்றி உரையில் அந்த உணர்வையே அவர்களுக்கும் பிரதிபலித்தார்.

“நாம் அதைச் செய்துவிட்டோம்,” என்றார் அவர். “நாம் ஓர்பன் ஆட்சியை வீழ்த்தினோம் – நாம் ஒன்றிணைந்து ஹங்கேரியை விடுவித்தோம். நமது தாய்நாட்டை நாம் மீட்டெடுத்தோம், உங்கள் அனைவருக்கும் நன்றி!” என்று பீட்டர் மாஜார் தமது உரையில் குறிப்பிட்டார்.

By admin