• Thu. Nov 12th, 2026

24×7 Live News

Apdin News

ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சியை இழந்து வீரராகப் பஞ்சாப் அணிக்கு செல்வது ஏன்? புதிய சவாலை எப்படி எதிர்கொள்வார்?

Byadmin

Nov 12, 2026


ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல், Trade, அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ரோஹித் சர்மா, கில், கிரிக்கெட்

படக்குறிப்பு, ஹர்திக் பாண்ட்யா

    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா – அர்ஷ்தீப் சிங் பரிமாற்றம் நடந்து முடிந்துள்ளது.

இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்குச் செல்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அடுத்து வரும் சீசனில் மும்பை அணிக்காக விளையாடவுள்ளார்.

மும்பை அணியில் ரூ.16.35 கோடிக்கு வாங்கப்பட்ட பாண்ட்யா, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கூடுதலாக ரூ.1.65 கோடிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியை சேர்ந்த அர்ஷ்தீப் சிங் அதே ரூ.18 கோடிக்கு மும்பைக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மேட்ச் வின்னராகத் திகழ்ந்த பாண்ட்யா, 2022 இல் குஜராத் அணியில் இணைந்து கேப்டன் பொறுப்பையும் ஏற்றார்.

பாண்ட்யா தலைமையில் களமிறங்கிய குஜராத் அணி, தனது முதல் சீசனிலேயே ஐபில் கோப்பையை வென்றது.

By admin