• Fri. Jul 17th, 2026

24×7 Live News

Apdin News

ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால் இந்த மாற்று வழிகள் கைகொடுக்குமா? ஓர் அலசல்

Byadmin

Jul 17, 2026


இரானுக்கும்  அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்திற்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை , மீண்டும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாற்று வழிகள் இருந்தபோதிலும், உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் தோராயமாக நான்கில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்மூஸ் நீரிணைக்கு எதுவும் இணையாக முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்துக்குப் பிறகு, உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை , மீண்டும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு தற்காலிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒரு மாதத்துக்குள்ளேயே, இரானும் அமெரிக்காவும் மீண்டும் பரஸ்பரம் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கப்பல்களை இயக்குவது மிகவும் ஆபத்தானதாக மாறினால், வளைகுடா பகுதி ஏற்றுமதியாளர்கள் தங்களது எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சந்தைக்குக் கொண்டு செல்ல மாற்று வழிகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

மாற்று வழிகள் உள்ளன, ஆனால் தற்போதைய நிலையில் இந்த முக்கிய நீர்வழிப் பாதைக்கு அவை எதுவும் முழுமையான மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

ஹோர்மூஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

தற்போதைய நிலையில் இந்த முக்கிய நீர்வழிப் பாதைக்கு அவை எதுவும் முழுமையான மாற்றாக இருக்க முடியாது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள் .

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை வழியாகக் கடந்து செல்லும் கப்பல்கள் மீது இரான் நடத்திய தாக்குதல்கள் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளன.

இரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள ஹோர்மூஸ் நீரிணை, அதன் அளவு, நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைவான செலவு ஆகியவற்றின் காரணமாக, வளைகுடா பகுதியின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான முதன்மை ஏற்றுமதிப் பாதையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

By admin