• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர்

Byadmin

Jun 28, 2026


இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 5 மில்லியன் மக்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த எண்களை தபால் மூலம் பயனாளர்களுக்கு அனுப்பாததால், பல தனிநபர்கள் தங்களது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலை குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரி செலுத்துவோர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்துக்குச் சென்று, தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் தமது வரி செலுத்துவோர் அடையாள எண்களின் நிலையை சரிபார்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post 12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் appeared first on Vanakkam London.

By admin