• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

‘2 ஆண்டுகள் தோண்டியும் கிடைக்காத அதிர்ஷ்டம்’ – சுரங்கத்தை மூடிய ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்தது எப்படி?

Byadmin

Aug 12, 2026


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் பெரிய வைரம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக மகிழ்ச்சியடைந்த அந்தத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகிலேஷ் பாலுடன் வேறு ஆறு பேரும் பன்னாவின் சரோகா கிராமத்தில் உள்ள சுரங்கத்தை ஒரு சொற்ப தொகைக்கு குத்தகைக்கு எடுத்தனர்.

இந்தியாவின் வைரச் சுரங்கப் பகுதியான பன்னாவில், ஏழு ஏழைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு அதிர்ஷ்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில், பெரிய அளவிலான வைரம் ஒன்றைக் கண்டுபிடித்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

எடைக்கருவியில் பரிசோதித்தபோது, அந்த வைரம் 17.96 கேரட் எடையுள்ளதாக தெரியவந்தது. பன்னா வைர அலுவலக அதிகாரி ரவி பட்டேல், அது “ரத்தினத் தரம் வாய்ந்த வைரம்” என்றும், இயற்கையாக கிடைக்கும் மிக உயர்தர வைரங்களில் ஒன்றாகும் என்றும் கூறினார்.

அந்த வைரத்தை “மிக மதிப்புமிக்கது” என்று வர்ணித்த அவர், வரும் அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் நடைபெறும் ஏலத்தில் அது விற்பனைக்கு விடப்படும் என்றார். அதன் மதிப்பு குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் இருக்கும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னாவில் வைரங்கள் கிடைப்பது மிகவும் அரிதானது அல்ல. இந்தியாவின் பெரும்பாலான வைர இருப்புகள் இங்குதான் உள்ளன.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, இந்த வைரம் 17.96 காரட் எடை கொண்டதுடன், ‘மதிப்புமிக்க… ரத்தினத்தரம் வாய்ந்தது’ என விவரிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னாவில் வைரங்கள் கிடைப்பது மிகவும் அரிதானது அல்ல. இந்தியாவில் பெரும்பாலான வைர வளங்கள் உள்ளன.

By admin