ஆப்கானிஸ்தான் படுதோல்வி:
கடின இலக்கை துரத்திய ஆப்கான்ஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்முல்லா குர்பாஸ் 15 ரன்களும், கேப்டன் இப்ராகிம் சத்ரான் 25 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஓமர்சாய் மற்றும் நூர் உல் ரஹ்மான் ஆகியோர் முறையே 17 மற்றும் 11 என இரட்டை இலக்க ரன்களை அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் வெறும் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையம் இழந்தது. இதனால் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.