• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

ரஷ்யா தடைகள் மசோதா: இந்தியா மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்கா வழி செய்கிறதா?

Byadmin

Sep 18, 2026


ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை 262-159 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓஹியோ மாகாண ஜனநாயகக் கட்சி பிரதிநிதி மார்சி காபர், மசோதா நிறைவேற்றிய பிறகு பேசுகிறார். இந்த மசோதாவுக்கு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ரஷ்யா மீது தடைகள் விதிக்கும் மசோதாவுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை 262-159 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா மூலம், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100% வரை வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்கு அதிகாரம் கிடைக்கும்.

இந்த நாடுகளில் இந்தியாவும் அடங்கும். அதிகாரப்பூர்வமாக, இந்த மசோதா ‘2026-ஆம் ஆண்டின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யா மற்றும் இரான் மீது தடைகள் விதிக்கும் சட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளும் இந்த நடவடிக்கையின் கீழ் இலக்காகக் கூடும்.

இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே அமெரிக்க செனட் பெரும்பான்மை வாக்குகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, அதிபர் டொனால்ட் டிரம்பின் கையெழுத்துக்காக மசோதா அனுப்பப்படும்.

By admin