• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

33 சதவிகித இலக்கு! வரலாற்று சாதனை படைத்த த.வெ.க

Byadmin

May 4, 2026


தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தவெக முன்னிலை வகிக்கும் நிலையில், அந்த கட்சி 33 சதவிகித வாக்குகளால் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலைமை 2 மணிக்கு பின்னர் மாறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில், 110 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம்

திமுக கூட்டணிக் கட்சிகள் 62 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியானது 61 தொகுதிகளிலேயே முன்னிலை பெற்று பின்தங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026க்கான வாக்கு எண்ணிக்கையில், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிரவைக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த இருமுனை போட்டியை உடைத்து, நடிகர் விஜய்யின் கட்சி தற்போது 110 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலைமை 2 மணிக்கு பின்னர் மாறும் என அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin