• Mon. May 4th, 2026

24×7 Live News

Apdin News

தவெக வெற்றி: திமுக பின்னடைவுக்கு காரணமான 5 முக்கிய விஷயங்கள் எவை?

Byadmin

May 4, 2026


தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள்
படக்குறிப்பு, தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு முரணாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. த.வெ.க. ஆட்சியமைக்கும் என்று ஆக்சிஸ் மை இந்தியாவின் கருத்துக்கணிப்பு மட்டுமே கூறியது. மற்ற கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுகவுக்கு சாதகமாகவே களம் இருப்பதாக குறிப்பிட்டன. வழக்கம் போல் திமுக – அதிமுக கூட்டணிகளுக்கு இடையேதான் பிரதான போட்டி இருக்கும் என்றே அந்த கணிப்புகள் கூறியிருந்தன.

ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் இதற்கு முற்றிலும் மாறானதாக உள்ளது. குறிப்பாக திமுக செல்வாக்கு மிக்கதாக கருதப்படும் சென்னையிலேயே மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

ஆளும் கட்சியின் 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். சுமார் 77 ஆண்டுகள் அரசியல் செயல்பாட்டைக் கொண்டிருக்கும் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்க காரணமான 5 முக்கிய விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1. ‘பொய்த்துப் போன திமுக எதிர்பார்ப்பு’

திமுகவின் மகளிர் நலத்திட்டங்கள் தேர்தலில் பலன் கொடுக்கவில்லையா?

பட மூலாதாரம், MK Stalin/X page

படக்குறிப்பு, திமுகவின் மகளிர் நலத்திட்டங்கள் தேர்தலில் பலன் கொடுக்கவில்லையா?

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பெரும்பாலான பேட்டிகள் மற்றும் பிரசாரங்களில் மகளிரை முன்னிறுத்தி தங்கள் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தினார். குறிப்பாக “குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பேருந்து பயணம் (பெண்களுக்கு அரசுப்பேருந்துகளில் இலவச பயணம்) , பள்ளிகளில் காலை உணவு திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கு, அவர்கள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ₹1,000 நிதியுதவி வழங்கும் திட்டமான புதுமைப் பெண் திட்டம்” உள்ளிட்ட திட்டங்களை முதன்மையானவையாக அவர் பட்டியலிட்டார்.

இது தவிர உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையிலான தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் மற்றும் வெகுஜன மக்களுக்கு பலன் தரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற திட்டங்களையும் திமுக தங்களின் சாதனையாக முன்னிறுத்தியது.



By admin